இந்திய வீரர் கில்லிடம் சச்சினா? கோஹ்லியா என கேள்வி கேட்ட அவுஸ்திரேலியா வீரர்: அதற்கு அவர் பதிலை பாருங்க

Report Print Santhan in கிரிக்கெட்
408Shares

இந்திய வீரர் ஷுப்மன் கில் களத்தில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த போது, அவுஸ்திரேலியா வீரர் மார்னஸ் லபுஷேன்சச்சினா, கோலியா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 7-ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்ஸில் ஆடிய அவுஸ்திரேலியா அணி 338 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதன் பின் ஆடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் அரைசதம் அடித்த நிலையில் அவுட் ஆகினார்.

அவுஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்து அற்புதமாக ஆடிய சுப்மன் கில்லின் ஆட்டத்தை முன்னணி வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இப்படி அவ்வப்போது பந்துகளை சுப்மன் கில் பவுண்டரிகளை விரட்டிக் கொண்டிருந்த போது, ஷார்ட் லெக் திசையில் நின்று கொண்டிருந்த அவுஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் ஷுப்மன் கில்லிடம், கில், உனக்கு சச்சின் பிடிக்குமா, விராட் கோஹ்லி பிடிக்குமா? என கேட்டார்.

அதற்கு கில் போட்டி முடியட்டும் அப்புறம் சொல்கிறேன் என பதிலளித்தார்.

இருப்பினும், திருப்தி அடையாத லபுஷேன், மீண்டும் கில்லிடம் அதே கேள்வி கேட்டார். சொல்லுங்கள் சச்சினா, கோஹ்லியா? என்ற போது, கில் பதிலளிக்காமல் துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அதனைத் தொடர்ந்து ரோஹித் ஷர்மாவிடம் லபுஷேன், ரோஹித், தனிமை முகாமில் என்ன பண்ணீங்க? என்று கேட்ட போது, அதற்கு ரோஹித் பதில் அளிக்காமல் தொடர்ந்து துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்