அடித்து நொறுக்கிய ஸ்மித்தை... ஒரே த்ரோவால் ரன் அவுட் ஆக்கி வெளியேற்றிய ஜடேஜா! வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்
846Shares

இந்திய அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்து சதம் அடித்து விளையாடி வந்த ஸ்டீவ் ஸ்மித்தை ஜடேஜா தன்னுடைய துல்லியமான த்ரோ மூலம் ரன் அவுட் ஆக்கி வெளியேற்றினார்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய அவுஸ்திரேலியா அணிக்கு முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் சொதப்பிய, இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்திய அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்தார். இவருடன் சேர்ந்த Marnus Labuschagne-ம் இந்திய அணியின் பந்து வீச்சை ஒரு புறம் நிதானமாக எதிர்கொண்டார்.

இந்த ஜோடியை ரவீந்திர ஜடேஜா பிரித்தார். 91 ஓட்டங்கள் எடுத்த நிலையில், Marnus Labuschagne அஜின்கிய ரஹானேவிடம் கேட்ச் கொடுத்த பவுலியன் திரும்ப, அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, ஒரு புறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்மித் சதம் அடித்தார்.

சதம் அடித்து 131 ஓட்டங்கள் குவித்து சிறப்பாக ஆடி வந்த ரவீந்திர ஜடேஜா தன்னுடைய துல்லியமான த்ரோ மூலம் ரன் அவுட்டாக்கினார். அந்த வீடியோவை இந்திய ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

ஸ்மித் வெளியேறியவுடன், அவுஸ்திரேலியா அணி 338 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்