கேட்சுகளை கோட்டை விட்ட ரிஷப் பாண்ட்! கடுப்பான அஸ்வின்: வலுவான நிலையில் அவுஸ்திரேலியா

Report Print Santhan in கிரிக்கெட்
417Shares

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

சிட்னியில் இன்று இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. வார்னரும், புதுமுக வீரர் புகோவ்ஸ்கியும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

வேகப்பந்து வீச்சாளர்களான பும்ராவும், முகமது சிராஜும் தொடக்கத்தில் பந்து வீசினார்கள்.

4-வது ஓவரில் இந்த ஜோடியை சிராஜ் தனது அபாரமான பந்துவீச்சால் பிரித்தார். வார்னர் 5 ஓட்டத்தில் அவரது பந்தில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

இதையடுத்து 2-வது விக்கெட்டுக்கு புகோவ்ஸ்கியுடன் மார்னஸ் லபுசேன் ஜோடி சேர்ந்தார்.

அவுஸ்திரேலியா அணி 7.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அப்போது புகோவ்ஸ்கி 14 ஓட்டங்களிலும், லபுசேன் 2 ஓட்டங்களிலும் இருந்தனர்.

அதன் பின் மீண்டும் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.

புதுமுக ஆட்டகாரரான புகோவ்ஸ்கி முதல் போட்டியிலேயே அரை சதம் அடித்து கலக்கினார். அவர் 62 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சைனி பந்து வீச்சில் வெளியேறினார்.

இந்நிலையில் லபுசேனுடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் விக்கெட் இழக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ஓட்டங்களை எடுத்தது. ஸ்மித் 31 ஓட்டங்களிலும், லபுசேன் 67 ஓட்டங்களிலும் களத்தில் இருந்தனர்.

இந்திய அணி தரப்பில் சிராஜ் சைனி தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பாண்ட் 2 கேட்ச்களை தவறவிட்டார். அஸ்வின் ஓவரில் புகோவ்ஸ்கி அடித்த எளிதான கேட்சை அவர் நழுவ விட்டார். இதேபோல முகமது சிராஜ் பந்திலும் புகோவ்ஸ்கி கேட்சை அவர் தவறவிட்டார்.

இதேபோல பும்ராவும் அவருக்கு எளிதான ரன் அவுட் ஒன்றையும் தவற விட்டார். இறுதியாக புகோவ்ஸ்கி 62 ரன்னில் சைனி பந்தில் ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்