ஐபிஎல் ஏலம் எப்போது? CSK தக்க வைத்து கொள்ள போகும் வீரர்கள் இவர்கள் தானாம்!

Report Print Santhan in கிரிக்கெட்
282Shares

சென்னை அணி ஐபிஎல் தொடரில் இந்த முறை தக்க வைத்துக் கொள்ள விரும்பும் வீரர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 14-வது இந்தாண்டு நடைபெறவுள்ளது. இதற்கான ஏலம் வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக டிரான்ஸ்பர் டிரேடிங் விண்டோ திறக்கப்பட்டுள்ளது. இந்த விண்டோவின் மூலம் ஒரு அணி தங்கள் அணியில் இருக்கும் வீரர்களை வெளியேற்ற முடியும். தங்கள் அணியில் இருக்கும் வீரர்களை பிற அணிக்கு இதன் மூலம் மாற்ற முடியும். இதற்கான விண்டோ நேற்று இரவு திறக்கப்பட்டது.

ஜனவரி 21-ஆம் திகதி வரை இந்த விண்டோ திறக்கப்பட்டு இருக்கும். இன்னும் 15 நாட்களில் பல வீரர்கள் பல்வேறு அணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள், சில வீரர்கள் தக்க வைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஒரு அணி 3 வீரர்களை தக்க வைத்து கொள்ள முடியுமாம். அந்த வகையில், சென்னை அணி இந்த முறை தீபக் சஹார், சாம்குரன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்க வைத்து கொள்ளவும் விரும்புவதாக கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்