டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதல்முறையாக முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதுவரை 2-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை முழுமையாக வென்றதன் மூலம் 2 தரவரிசை புள்ளிகளை கூடுதலாக பெற்று முதல்முறையாக நம்பர் ஒன் அரியணையை அலங்கரித்துள்ளது.
ஒட்டுமொத்தத்தில் நம்பர் ஒன் இடத்தை எட்டிய 7-வது அணி நியூசிலாந்து ஆகும்.
தற்போதைய தரவரிசையின்படி நியூசிலாந்து அணி முதலிடத்திலும், அவுஸ்திரேலிய அணி இரண்டாமிடத்திலும், இந்திய அணி மூன்றாமிடத்திலும் உள்ளன.