ஐபிஎல் 2021 தொடருக்கான டிரேடிங் விண்டோ திறக்கப்பட்டுள்ள நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து முக்கியமான வீரர்கள் நீக்கப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி 11ம் திகதி நடக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கான டிரேடிங் விண்டோ தற்போது திறக்கப்பட்டுள்ளது.
டிரேடிங் விண்டோ என்பது ஒரு அணி தங்கள் அணியில் இருக்கும் வீரர்களை விடுவிப்பதாகும். இந்த வீரர்களை மற்ற அணிகள் விரும்பினால் வாங்கிக்கொள்ள முடியும்.
வரும் 21ம் திகதி வரை மட்டுமே டிரேடிங் விண்டோ திறக்கப்பட்டு இருக்கும். வீரர்களை வெளியேற்ற வேண்டும் என்றால் அதற்குள் வெளியேற்ற வேண்டும்.
இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிதான் அதிக அளவு வீரர்களை டிரேடிங் விண்டோ மூலம் வெளியேற்றும் என்று கூறுகிறார்கள்.
அதில், ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா, கேதார் ஜாதவ் உள்ளிட்ட 4 வீரர்கள் முதல் கட்டமாக டிரேட் செய்யப்படுவார்கள்.
இன்னும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் இதேபோல் டிரேட் செய்யப்பட உள்ளனர். வெளியேற்றப்படும் 4-5 வீரர்களுக்கு இணையாக 5 வீரர்கள் வரை சிஎஸ்கே அணியில் எடுக்க உள்ளது.
ஜனவரி 21ம் திகதிக்குள் இந்த தெரிவை செய்ய வேண்டும். இதனால் சிஎஸ்கே அணியில் பல புதிய வீரர்கள் விரைவில் தெரிவு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.