டெஸ்ட் போட்டி ரகசிய திட்டத்தை போதையில் உளறி தீர்த்த ரவி சாஸ்திரி! அவுஸ்திரேலியா முன்னாள் வீரர் பகீர் தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்
308Shares

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற ரகசிய திட்டத்தை இந்திய அணியின் தலமை பயிற்சியாளர ரவிசாஸ்திரி உளறிவிட்டதாக அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் இயான் சேப்பல் கூறியுள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி தொடர் வரும் 17-ஆம் திகதி துவங்கவுள்ளது. இந்திய அணியில் இஷாந்த் ஷர்மா காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடவில்லை, அதே போன்று கோஹ்லியும் முதல் போட்டி முடிந்தவுடன் நாடு திரும்பவுள்ளார்.

அதன் பின் இந்திய அணியிக்கு ராஹானே கேப்டனாக இருப்பார் என்று கூறப்படும் நிலையில், இந்திய அணிக்கு மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில், மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருக்கான போட்டியில் சைனி, சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் இருக்கின்றனர்.

இதையடுத்து அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இயன் சாப்பல் தன்னுடன் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மது அருந்தியதாக போது இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் யார் என்ற திட்டம் குறித்து தன்னிடம் கூறிவிட்டதாக கூறியுள்ளார்.

நானும் ரவி சாஸ்திரியும் மது அருந்தி கொண்டிருக்கும் போது அவர் இந்திய அணியின் 3-வது வேகப்பந்துவீச்சாளர் இடத்திற்கு உமேஷ் யாதவை தான் தேர்வு செய்யப் போகிறோம் என்று கூறிவிட்டார். இந்த போட்டியில் சிராஜ், சைனி ஆகியோர் இருந்தாலும் கடந்த கால அனுபவத்தை வைத்து உமேஷ் யாதவ் நாங்கள் களமிறங்கப் போவதாக ரவிசாஸ்திரி கூறியதாக இயான் சேப்பல் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்