நடராஜனின் வாழ்க்கை ஒரு இன்ஸ்பிரேஷன்! தமிழனை பாராட்டி தள்ளிய ஹார்திக் பாண்ட்யா: குவியும் வாழ்த்துக்கள்

Report Print Santhan in கிரிக்கெட்
564Shares

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றுவாது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் விளையாட, தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட நடராஜன், அற்புதமாக பந்து விசி அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்நிலையில், போட்டிக்கு பின் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்ட்யா, நடராஜன் குறித்து கூறுகையில், நடராஜனின் வாழ்க்கை கதை அனைவருக்குமே ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும்.

அவர் மிகவும் எளிதான பின்புலமுள்ள குடுமபத்தில் இருந்து வந்தவர். அவுஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக விளையாடும் போது இது போன்ற சவால்களை எதிர்த்து சிறப்பாக விளையாட வேண்டும். இன்று மொத்தத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி என பாண்டியா குறித்து குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்