சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 12,000 ரன்களை மிகவும் வேகமாகக் கடந்த வீரர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி பெற்றுள்ளார்.
கான்பெர்ராவில் நடக்கும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் விராட் கோஹ்லி.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 92 ரன்களும், ஜடேஜா 66 ரன்களும் விராட் கோஹ்லி 63 ரன்களும் எடுத்தனர்.
விராட் கோஹ்லி 251 போட்டிகளில் விளையாடி 12000 ரன்களை எடுத்துள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் 309 போட்டிகளிலும், பாண்டிங் 323 போட்டிகளிலும், சங்ககாரா 359 போட்டிகளிலும், ஜெயசூர்யா 390 போட்டிகளிலும் 12000 ரன்களை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.