ரோஹித் சர்மாவை ஓரம்கட்ட பக்காவாக பிளான் போட்ட கோஹ்லி: வெளிவரும் பின்னணி

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
624Shares

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்க இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதனால், அவருக்கு பதில் அணியில் யாரை சேர்ப்பது என இப்போதே அணித்தலைவர் விராட் கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகிய இருவரும் தெரிவு செய்து வைத்து விட்டதாக கூறப்படுகிறது.

இது சரியான திட்டமிடல் என சிலரால் பாராட்டப்பட்டாலும், விராட் கோஹ்லியும், ரவி சாஸ்திரியும் இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரோஹித் சர்மா நீக்கத்தை ஏன் இத்தனை அவசரமாக முன் கூட்டியே திட்டமிட்டு வருகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் ஓரளவு குணமான நிலையில் தன் உடற்தகுதியை நிரூபிக்க இந்தியாவில் தங்கி உள்ளார்.

மட்டுமின்றி, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

அந்த அகாடமி அவருக்கு சான்றிதழ் அளித்தால் மட்டுமே அவரால் அவுஸ்திரேலியாவில் போட்டிகளில் பங்கேற்க முடியும்.

அவுஸ்திரேலியா செல்லும் அணியினருடன் அனுப்பாமல், உடற்தகுதியை நிரூபிக்க சொன்ன இந்திய அணி நிர்வாகம், தற்போது அவர் இன்னும் நான்கு நாட்களுக்குள் அவுஸ்திரேலியா வரவில்லை என்றால் டெஸ்ட் அணியில் சேர்ப்பது கடினம் என கூறி உள்ளது.

ரோஹித் சர்மா நான்கு நாட்களுக்குள் அவுஸ்திரேலியா செல்ல வேண்டும் என்றால் தேசிய கிரிக்கெட் அகாடமி அவருக்கு உடற்தகுதி சான்றிதழ் அளிக்க வேண்டும். ஆனால் இப்போது வரை அது பற்றி அவர்கள் எதுவும் கூறவில்லை என தெரிய வந்துள்ளது.

அதற்குள் அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரராக ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பெற்று இருக்கும் ஸ்ரேயஸ் ஐயரை தெரிவு செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

ரோஹித் சர்மா குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படாத நிலையில் அவருக்கு மாற்று வீரரை தயார் செய்து வைத்து உள்ளது இந்திய அணி நிர்வாகம்.

உண்மையில், தேர்வுக் குழு தான் மாற்று வீரரை தெரிவு செய்ய வேண்டும். ஆனால், அவுஸ்திரேலியாவிலேயே அணித்தலைவரும், பயிற்சியாளரும் மாற்று வீரரை தெரிவு செய்து வைத்து விட்டனர்.

இது கோஹ்லிக்கும் ரோகித்துக்கும் இடையே நிலவும் ஈகோ பிரச்சனை தான் என கூறுபவர்கள் ஒருபுறமிருக்க,

கே.எல்.ராகுலின் அதிரடி தொடக்கம் ஹிட்மேன் என அழைக்கப்படும் ரோகித்தின் விளையாட்டு வாழ்க்கைக்கு ஆட்டம் காண செய்துள்ளது என கூறுபவர்களும் உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்