இந்திய அணியின் புதிய யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் என்றழைக்கப்படும் நடராஜனிடம் அதைத் தாண்டி பல திறமை இருப்பதாக முன்னாள் வீரர் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த தமிழக வீரர் நடராஜன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன் காரணமாக அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியில் நடராஜன் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஹைதராபாத் அணியின் ஆலோசகருமான லட்சுமணன், எல்லோருக்கும் நடராஜனை ஒரு யார்க்கர் ஸ்பெஷலிஸ்டாக தான் தெரியும். ஆனால் அவரிடம் அதைவிட மேலான ஒரு திறமை இருக்கிறது.
அதாவது அவரது பந்து வீச்சில் வேரியேஷன் காட்டக்கூடிய வல்லமை கொண்டவர் என்பதை நான் சொல்லியாக வேண்டும். அவரால் ஷார்ப் பவுன்சர், ஆப் கட்டர், ஸ்லோவர் பால், அவுட் சைட் யார்க்கர் என வெரைட்டியாக வீச முடியும். ஏனோ அதனை இந்த ஐபிஎல் தொடரை செய்ய தவறிவிட்டார்.
குறிப்பாக புது பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி திறமையும் அவரிடம் உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரில் இவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.