கோஹ்லி குழந்தை அவுஸ்திரேலியா மண்ணில் பிறந்தால்? ஜாம்பவான் ஆலன் பார்டரின் கோரிக்கை

Report Print Santhan in கிரிக்கெட்
899Shares

இந்திய அணியின் தலைவரான கோஹ்லி விருப்பப்பட்டால் அவுஸ்திரேலியா அணிக்காக விளையாடலாம், அவர் குழந்தை பாதி குடியுரிமை என அவுஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் ஆலன் பார்டர் கூறியுள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வித தொடர்களில் விளையாடவுள்ளது.

இதில், கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும், கோஹ்லி விளையாடமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் அவரின் அனுஷ்கா சர்மா குழந்தை பெற்றெடுக்கும் நாள் நெருங்கிவிட்டதால், இந்த விடுமுறை என்று கூறப்பட்டது.

இந்நிலையில், அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஜாம்பவான், ஆலன் பார்டர் கோஹ்லி இந்திய அணிக்கு பல ஆண்டுகளாக முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார்.

புதிய இந்தியாவின் அசைக்க முடியாத அங்கமாக அவர் இருக்கிறார். அவர் அவுஸ்திரேலியா அணிக்கு விளையாட விரும்பினால், எந்த நேரமும் அவரை வரவேற்க தயாராக இருக்கிறோம்.

அதே நேரம் அவருக்கு பிறக்கவிருக்கும் குழந்தை அவுஸ்திரேலியா மண்ணில் பிறந்தால் அதனடிப்படையில் பாதி குடியுரிமை பெற்று அந்த குழந்தையையும் அவுஸ்திரேலியா அணியில் விளையாட வைக்க கோரிக்கை விடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்