இலங்கையில் துவங்கவுள்ள கிரிக்கெட் தொடர்! நட்சத்திர வீரர்களான மலிங்கா, கெயில் விலகல்

Report Print Raju Raju in கிரிக்கெட்
562Shares

இலங்கையில் துவங்கவுள்ள எல்.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து நட்சத்திர வீரர்களான மலிங்கா மற்றும் கெயில் விலகியுள்ளனர்.

இலங்கையில், லங்கா பிரிமியர் லீக் எல்.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் நவம்பர் 26 முதல் டிசம்பர் 16 வரை நடக்கவுள்ளது. கொழும்பு, கண்டி, தம்புலா, காலே, யாழ்ப்பாணம் என, 5 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் கண்டி அணிக்காக களமிறங்க இருந்த கெய்ல் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிளங்கட் எல்.பி.எல்., தொடரில் இருந்து விலகினர்.

மேலும் நட்சத்திர வீரர் மலிங்கா, காலே அணி கேப்டனாக இருப்பார் என கூறப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் முதல் எவ்வித பயிற்சியும் இல்லாத நிலையில், இத்தொடரில் பங்கேற்க முடியாது என விலகிக் கொண்டார்.

சம்பளம், ஒப்பந்த விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமதுவும் வெளியேறினார். போட்டிகள் துவங்க இன்னும் ஒரு வாரம் மட்டும் உள்ள நிலையில் முன்னணி வீரர்கள் விலகியது, தொடருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்