ஒன்றரை மாதத்தில் பறிப்போகும் சாம்பியன் பட்டம்... பிசிசிஐ வைத்த செக்: கடுப்பில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
2336Shares

2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் மார்ச் மாதமே தொடங்க இருப்பதாக வெளியான தகவலால் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த 2020 ஐபிஎல் தொடர்பில் மும்பை அணி மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஐந்தாவது முறையாக ஐபிஎல் கிண்ணத்தை வென்றது.

துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என அனைத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டது.

எஞ்சிய அணிகள் அனைத்திலும் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி வலுவாக இருந்தது.

அதே போல, அணியில் பெயரளவுக்கு மட்டுமே மாற்றங்களை கொண்டு வந்தது.

இந்த நிலையில், சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பாதகமாக ஒரு தவிர்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

பிசிசிஐ 2021 ஐபிஎல் தொடரை மார்ச் மாதம் நடத்த உள்ளது. அதற்கு முன் மெகா ஏலமும் நடத்த உள்ளது.

நவம்பர் மாதம் 2020 ஐபிஎல் கிண்ணத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி மார்ச் மாதமே அந்த பட்டத்தை இழக்கும்.

அடுத்த சீசனிலும் சாம்பியன் பட்டம் வென்றால் தான் சாம்பியனாக தொடர முடியும்.

அப்படி நடந்தால் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஒன்றரை மாதம் மட்டுமே சாம்பியனாக இருக்க முடியும்.

ஐபிஎல் விதிகளின்படி, இதே வீரர்களை தக்க வைக்கமும் முடியாது. மெகா ஏலத்தில் மும்பை வீரர்கள் மீது கடுமையான போட்டி இருக்கும் என்பதால், பலரை மீண்டும் அணியில் சேர்க்க முடியாமல் போகலாம்.

இதனாலையே, மும்பை அணியின் பல வீரர்கள் கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்