ஒற்றை கையில் அசால்ட்டாக பறந்து பிடித்த ஆர்ச்சர்! மிரண்டு போன வீரர்கள்: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

மும்பை அணிக்கெதிரான போட்டியில், ராஜஸ்தான் அணி வீரர் ஆர்ச்சர் பிடித்த அற்புதமான கேட்ச் அந்தணி வீரர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள் மோதின, இப்போட்டியில் மும்பை அணி நிர்ணயித்த 195 ஓட்டங்கள் குவித்தது. அதன் பின் ஆடிய ராஜஸ்தான் அணி அசால்ட்டாக இலக்கை எட்டிப் பிடித்து அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியில், மும்பை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, ஆட்டத்தின் 10.4-வது ஓவரை சுதீப் தியாகி வீசிய ஓவரை, இஷான் கிஷான் அடித்து ஆட முற்பட, ஆப் சைடு திசையில், பீல்டிங் நின்று கொண்டிருந்த ஜோப்ரா ஆர்ச்சர் அற்புதமாக பறந்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்தார்.

இதைக் கண்ட ராஜஸ்தான் அணி வீரர்கள் பிரமித்து போனர். அது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்