மும்பை அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளதால், சென்னை அணி பிளே ஆப் வாய்ப்பை முற்றிலும் இழந்து வெளியேறியுள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டி ராஜஸ்தானுக்கு எவ்வளவு முக்கியமானோதா? அதே போன்று சென்னை அணிக்கும் இது முக்கியமான போட்டியாக இருந்தது.
இப்போட்டியில் ராஜஸ்தான் தோல்வியடைந்தாலும், மற்றும் சில அணிகளின் முடிவுகளை கணக்கில் வைத்தும், சென்னை அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு இருந்தது.
ஆனால், நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்று, ரன் ரேட்டையும் பலமாக வைத்துக் கொண்டுள்ளதால், சென்னை அணியின் பிளே ஆம் கனவு முடிந்துவிட்டது.
12 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. அடுத்துவரும் 2 போட்டிகளையும் சென்னை வென்றாலும் அதனால் பயனில்லை. இதனால் முதல்முறையாக சென்னை அணி பிளே ஆப் செல்லாமல் வெளியேறியுள்ளது.