கோஹ்யின் ரிவ்யூ! ஆக்ரோசமாக கொண்டாடிய வீரர்கள்: அமைதியாக கையை கட்டி நின்ற பின்ச்சின் வீடியோ காட்சி

Report Print Santhan in கிரிக்கெட்
579Shares

கொல்கத்தா அணி வீரர் தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டை, ரிவ்யூ எடுத்ததன் மூலம் வீழ்த்திய நிலையில், அந்த மகிழ்ச்சியை பெங்களூரு வீரர்கள் கொண்டாடிய நிலையில், சக வீரரான பின்ச் அதற்கு எந்த ஒரு ரியாக்‌ஷனும் கொடுக்காமல் நின்றுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில், பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் பெங்களூரு அணி இந்தாண்டு 10 போட்டிகளில் 7 வெற்றி பெற்றுள்ளதால், இன்னும் நான்கு போட்டிகளில் 2-ல் ஜெயித்தாலே, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடலாம் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில், இப்போட்டியில் சாகுலா வீசிய ஓவரி, தினேஷ் கார்த்தில் அந்த பந்தை தடுத்து ஆட முயன்றார். ஆனால் பந்தானது, அவரது கால்காப்பில் பட்டதால், எல்.பி.டபில்யூ கேட்கப்பட்டது.

நடுவர் அவுட் இல்லை, என்றவுடன் கோஹ்லி உடனடியாக டி.ஆர்.எஸ் ரிவ்யூ எடுத்தார். அதில் அவுட் என்று வந்தவுடன், கோஹ்லி உட்பட பெங்களூரு அணி வீரர்கள் இந்த விக்கெட்டை கொண்டாட, ஆனால் பின்ச் மட்டும் எந்த வித கொண்டாட்டத்தையும் வெளிப்படுத்தாமல், கையை கட்டி சாதரணம நின்றிருந்தார்.

இதை ரசிகர்கள் குறிப்பிட்டு காண்பித்து டிரண்டாக்கி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்