அடுத்தடுத்து அதிரடி சதம்! ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்துள்ள பிரபல நட்சத்திர வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்
191Shares

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து இரு சதங்களை விளாசியதன் மூலம் ஷிகர் தவான் புதிய சாதனையை படைத்துள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த நிலையில், நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்திலும் சதம் அடித்து அசத்தினார்.

அடுத்தடுத்து சதம் அடித்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து இரு சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றுள்ளார்.

அதேபோல், ஒரு ஐபிஎல் தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதம் அடிக்கும் 2-வது இந்திய வீரர் என்ற பெருமையும் ஷிகர் தவான் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் ஒரு ஐபிஎல் தொடரில் 4 சதங்களை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணித்தலைவர் விராட் கோஹ்லி விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்