சிஎஸ்கே-வுக்கு மேலும் ஒரு பெரிய அடி: 2020 ஐபிஎல் தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்

Report Print Basu in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ இடுப்பில் ஏற்பட்ட காயத்தினால் நடந்து வரும் 2020 ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான மிக மிக குறைந்த வாய்ப்புகளுடன் போராடி வரும் சென்னை அணிக்கு இது பொரிய அடியாக அமைந்துள்ளது.

இடுப்பு காயம் காரணமாக டுவைன் பிராவோ ஐபிஎல்-லில் இருந்து விலகியுள்ளார் என்று சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காஷி விஸ்வநாதன் தெரிவித்தார்.

பிராவோ ஆறு ஆட்டங்களில் விளையாடி இரண்டு இன்னிங்ஸ்களில் ஏழு ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும், பந்துவீச்சில் அவர் 8.57 என்ற எகனாமியுடன் ஆறு விக்கெட்டுகளைப் கைப்பற்றினார்.

10 ஆட்டங்களில் ஏழு தோல்விகளை அடைந்துள்ள சிஎஸ்கே அணியின் பிளே-ஆப் வாய்ப்பு ஏற்கனவே கைநழுவி விட்டது.

மூத்த வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் இல்லாததால் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே மோசமாக விளையாடி வருகிறது.

ரெய்னா, ஹர்பஜன் இருவரும் தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினர். தற்போது பிரவோவும் விலகியுள்ளது அணிக்கு பெரிய அடியாக அமைந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்