ராஜஸ்தான் அணி வீரரான ஜோஸ் பட்லருக்கு, சென்னை அணியின் தலைவர் டோனி சிறப்பு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணி தோல்வியடைந்தது.
இதன் மூலம் சென்னை அணியின் பிளே ஆப் சுற்று ஏறக்குறைய முடிந்துவிட்டது. ஏதேனும் தொடர்களில் அதிசயம் நிகழ்ந்தால் தான் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெற முடியும்.
இந்நிலையில், நேற்றைய போட்டி டோனிக்கு 200-வது ஐபிஎல் போட்டி ஆகும், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 200 போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் டோனி ஆவார்.
இதையடுத்து நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு காரணமான ஜோஸ்பட்லருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது.
ஆனால் ஆட்ட நாயகன் பரிசை விடவும் அவருக்குக் கிடைத்த அரும்பெரும் பரிசு சென்னை அணியின் கேப்டன் டோனியின் புகழ்பெற்ற 7-ஆம் எண் ஜெர்சி கிடைத்தது.
அதை சிறப்புப் பரிசாகத் டோனியிடம் இருந்து பட்லர் பெற்றுக் கொண்டார். 200வது ஐபிஎல் ஆட்டத்தில் ஆடிய உண்மையான லெஜண்டின் மதிப்பு மிக்க 7-ஆம் எண் ஜெர்ஸியை பரிசாகப் பெற்றது ஜோஸ் பட்லரின் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான தருணமாக இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.