ஒன்னும் அடிக்கமாட்டான்... நீ போடுடா! தமிழில் டிப்ஸ் கொடுத்த தமிழன் தினேஷ் கார்த்திக்கின் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்
1908Shares

கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் தமிழில் வருண் சக்ரவர்த்திக்கு டிப்ஸ் கொடுத்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக், அதன் பின் பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக, தன்னுடைய கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

தற்போது கொல்கத்தா அணிக்கு இயான் மோர்கன் கேப்டனாக உள்ளார்.

இந்நிலையில், தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருந்த போது, அணியில் இருந்த தமிழகத்தை சேர்ந்த சகவீரர் வருண் சக்ரவர்த்தி பந்து வீசும் போது, தமிழில் ஆலோசனை வழங்கியபடியே இருந்தார்.

அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் ஒரு கட்டத்தில் மும்பை அணிக்கெதிரான போட்டியில், ஒன்னும் அடிக்கமாட்டேன், அதே லென்த் போடு என்று கூறுவதும் பதிவாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்