டோனியை விமர்சித்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த முன்னாள் இந்திய வீரர்! என்ன சொல்லியிருக்கார் பாருங்க

Report Print Santhan in கிரிக்கெட்
1408Shares

டோனியை விமர்ச்சிப்பவர்களைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சயத் கிர்மானி கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும், இந்த ஐபிஎல் தொடரில் டோனியின் ஆட்டம் அந்தளவிற்கு இல்லை, அதுமட்டுமின்றி சென்னை அணியின் ஆட்டமும், அந்தளவிற்கு ஆக்ரோஷமாக இல்லை.

இதன் காரணமாக கடுமையான விமர்ச்சனங்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சயத் கிர்மானி, ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையிலும் உயர்வு எவ்வாறு வந்து அவரை மேலே கொண்டு செல்லுமோ அதேபோல சறுக்கல் இருப்பதும் இயல்புதான்.

நேரத்திற்கு ஏற்றாற்போல், சில சம்பவங்களும் மாறுவது இயற்கை. ஆனால், டோனியின் திறமையைப் பற்றி இப்போது சந்தேகப்படுவோர், விமர்சிப்பவர்களை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன்.

கிரிக்கெட்டில் ஒரு நேரத்தில் மிகச்சிறந்த பினிஷர் என்பதை மறந்துவிடக்கூடாது. நீண்டகால ஓய்வுக்குப் பின் மீண்டும் கிரிக்கெட் டோனி வந்துள்ளார். இதனால் அதன் பாதிப்பு ஐபிஎல் தொடரில் சற்று இருக்கத்தான் செய்யும்.

டோனிக்கு இப்போது இருக்கும் வயதில் எனக்குத் தெரிந்து எந்த வீரரும் இவ்வளவு ஆரோக்கியமாக, உடல் தகுதியுடன் இருந்து விளையாடியதில்லை. மனப் பக்குவமும் இருந்ததில்லை. இப்போதுள்ள இளைஞர்களே டோனியின் உற்சாகத்துக்கு இணையாக இருப்பார்களா எனத் தெரியாது.

இந்த வயதில் எதிர்காலம் குறித்து ஒவ்வொரு வீரருக்கும் சில கனவுகள், எதிர்பார்ப்புகள், சிந்தனைகள் வரும். அதனால் பதற்றமும் இருக்கும். இது இயல்பானது. இதை நாம் வெளிப்படையாக ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்