ஜடேஜா, பிரவோவுக்கு பதிலாக ஜாதவை களமிறக்கியது ஏன்? சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் விளக்கம்

Report Print Basu in கிரிக்கெட்
728Shares

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பிராவோ, ஜடேஜாவுக்கு பதிலாக கேதார் ஜாதவை ஏன் அனுப்பப்பட்டார் என்பது குறித்து சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விளக்கமளித்துள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

போட்டியின் இறுதி கட்டத்தில் பிராவோ, ஐடேஜா இருந்த போதும் சென்னை அணி ஜாதவை களமிறக்கியது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

ஜாதவ் 12 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். சுலபமாக வெற்றிப்பெற வேண்டிய போட்டியில் சென்னை தோற்றதற்கு ஜாதவ் தான் காரணம் என ரசிகர்கள் ஜாதவை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பிராவோ, ஜடேஜாவுக்கு பதிலாக கேதார் ஜாதவை ஏன் அனுப்பப்பட்டார் என்பது குறித்து சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விளக்கமளித்துள்ளார்.

போட்டிக்கு பின் பேசிய பிளெமிங், அந்த நேரத்தில், கேதார் சுழற்பந்து வீச்சாளரை நன்றாக விளையாடி ஆதிக்கம் செலுத்த முடியும் என்று நாங்கள் நினைத்தோம், அதே நேரத்தில் ஜடேஜா களமிறங்கி போட்டியை முடிக்க இருந்தார்.

ஆனால் இறுதியில், வெற்றிக்கு தேவையான ரன்கள் அதிகமாக இருந்தன, நாங்கள் போட்டியை இழந்துவிட்டோம் என கூறினார்.

எங்களுக்கு நிறைய திறமையாக பேட்ஸ்மேன்கள் கிடைத்துள்ளன. கேதார் இந்தியாவுக்கு நடுத்தர வீரர்களில் கடைசியாக களமிறங்குபவர். அதனால் அவரை களமிறங்கினோம்.

வெற்றி இலக்கை எட்ட கேதரிடம் சில பந்துகள் இருந்தன, ஆனால் அது பலனளிக்கவில்லை. பேட்ஸ்மேன்களின் முயற்சியால் தான் ஏமாற்றமடைந்ததாக பிளெமிங் கூறினார்.

பேட்ஸ்மேன்களின் முயற்சியால் தான் ஏமாற்றமடைந்ததாக ஃப்ளெமிங் கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்