லங்கா பிரீமியர் லீக் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in கிரிக்கெட்

லங்கா பிரீமியர் லீக்கின் தொடக்க தேதியை இலங்கை கிரிக்கெட் மீண்டும் மாற்றியமைத்துள்ளது.

ஆரம்பத்தில், இலங்கையின் உள்ளூர் டி-20 தொடரான எல்பிஎல் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற இருந்தது, ஆனால் தொடர்ந்து வளர்ந்து வரும் கொரோனா நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

எல்பிஎல் நவம்பர் 14 முதல் நவரம்பர் 21 வரை நடைபெறும் என தற்போது இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் சுகாதார விதிமுறைகளின்படி 'தனிமைப்படுத்தப்பட்ட தேவைகள்' கடைபிடிக்க வீரர்களுக்கு போதுமான நேரம் கிடைப்பதை உறுதி செய்ய தேதி மீண்டும் மாற்றப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.

ஐபிஎல் 2020-ல் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு எல்பிஎல் தொடரில் இடம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவவே அட்டவணையை மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களின் வரைவு இப்போது அக்டோபர் 1 க்கு பதிலாக அக்டோபர் 9 அன்று நடைபெறும்.

ஐபிஎல் நவம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்பதால், ஐபிஎல்-ல் பங்கேற்ற பிறகு எல்பிஎல் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் வீரர்களுக்கு சிறிது ஓய்வு வழங்க நாங்கள் நினைத்தோம் என்று எல்பிஎல் இயக்குநர் ரவின் விக்ரமரத்ன கூறினார்

எல்.பி.எல் ரங்கிரி தம்புல்லா சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், பல்லேகேல் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் மற்றும் சூரியவேவா மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் என மூன்று சர்வதேச அரங்குகளில் விளையாடப்படும்.

கொழும்பு, கண்டி, காலி, தம்புல்லா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களின் பெயரிடப்பட்ட ஐந்து அணிகள் போட்டிகளில் பங்கேற்கின்றன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்