ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியின் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

Report Print Kavitha in கிரிக்கெட்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.

அபுதாபியில் நேற்றிரவு அரங்கேறிய 11-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின

இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.

விறுவிறுப்பாக நடைப்பெற்ற இப்போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் டெல்லி அணி செய்யும் முதல் தவறு என்பதால் கேப்டனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் முன்னதாக பெங்களூரு கேப்டன் விராட் கோலிக்கும் இதே போல் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்