ஐபிஎல் தொடரில் 2000 ரன்: சச்சினை பின்னுக்குத் தள்ளி முதல் இந்திய வீரர்

Report Print Kavitha in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 132 ஓட்டங்கள் குவித்த பஞ்சாப் அணி வீரர் கே.எல்.ராகுல் அதிவேகமாக 2 ஆயிரம் ஓட்டங்களை கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது.

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் 206 ஓட்டங்கள் குவித்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் துவக்க துடுப்பாட்ட வீரரான கேஎல் ராகுல் ஆட்டமிழக்காமல் 69 பந்துகளுக்கு 132 ஓட்டங்களைக் குவித்தார்

இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேகமாக 2,000 ஓட்டங்களை எட்டிய இந்திய துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார்.

இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 63 இன்னிங்சில் கடந்து அதிவேகமாக கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

தற்போது கே.எல் ராகுல் அந்த பெருமையை தட்டிப்பறித்துள்ளளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்