ஐபிஎல்-ல் வர்ணனையாளராக கலக்கி வந்த அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்: பேரதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்

Report Print Basu in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மும்பையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

59 வயதான டீன் ஜோன்ஸ், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2020 ஐபில் தொடரின் ஸ்போர்ட்ஸ் வர்ணனைக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தார்.

இதற்காக மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் உயர் பாதுகாப்பில் இருந்த படி ஐபிஎல் போட்டிகளை வர்ணனை செய்து வந்தார்.

இந்நிலையில் இன்று மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம் கிரிக்கெட் உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் டீன் ஜோன்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டீன் ஜோன்ஸ் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 11 சதங்களுடன் 3631 ரன்கள் எடுத்துள்ளார்.

டீனோ என பிரபலமாக அழைக்கப்படும் வலது கை பேட்ஸ்மேனான டீன் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்.

164 ஒருநாள் போட்டிகளில் 44.61 சராசரியாக 6,068 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்டிரைக் ரேட் 72.56 ஆகக் கொண்டிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் 41 போட்டிகள் வலிமைமிக்க மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடிவுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்