2020 ஐபிஎல் தொடரிலிருந்து மேலும் ஒரு நட்சத்திர வீரர் விலகல்: ஐதராபாத் அணிக்கு பெரிய அடி

Report Print Basu in கிரிக்கெட்

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் மார்ஷ் ஐபிஎல் 2020 தொடரின் மீதமுள்ள போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

திங்களன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான சன் ரைசர்ஸ் ஐதராபாத்தின் போட்டியில் கணுக்கால் காயம் ஏற்பட்டதால் மிட்செல் மார்ஷ் ஐபிஎல் 2020 தொடரின் மீதமுள்ள போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

மிட்செல் மார்ஷ் விலகியதை சன் ரைசர்ஸ் ஐதராபாத் அதன் அதிகாரப்பூர் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

"மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விலகிவிட்டார். அவர் விரைவாக குணமடைய விரும்புகிறோம். ஐபிஎல் 2020 தொடரில் அவருக்கு பதிலாக ஜேசன் ஹோல்டர் வருவார் என்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி தெரிவித்துள்ளது.

பெங்களூருக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

போட்டியின் முதல் இன்னிங்ஸின் 5வது ஓவரை அவுஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஸ் வீசனார். அப்போது பின்ச் அடித்த பந்தை தடுக்க முயன்ற போது மிட்செல் மார்ஸ்-க்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் பந்து வீச்சை பாதியில் விட்டு வெளியேறினார். பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் காயத்துடன் பேட்டிங் விளையாடிய மார்ஷ் டக் அவுட்டாகி வெளியேறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்