4 பந்துக்கு 36 ரன்! மூன்று சிக்ஸர்கள் பறக்க விட்ட டோனி: மைதானத்திற்கு வெளியே ரோட்டில் விழுந்த வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியின் கடைசி ஓவரில் டோனி மூன்று சிக்ஸர் அடித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 217 ஓட்டங்களை விரட்டி சென்னை, இறுதியில் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், இப்போட்டியின் கடைசி ஓவரின் 4 பந்தில் 36 ஓட்டங்கள் தேவைப்பட்டது, டோனி மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

அதில் ஒரு பந்தானது, மைதானத்திற்கு வெளியே சென்று விழுந்தது. அந்த வீடியோ காட்சி தற்போது ஐபிஎல் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் டோனி அடித்த இந்த சிக்ஸரின் தொலைவு 92 மீற்றர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்