இதுபோன்று நான் அவுட்டானதே இல்லை: தனது வினோதமான அவுட்டால் மிரண்டு போன டேவிட் வார்னர்

Report Print Basu in கிரிக்கெட்

ஐபிஎல் 2020 தொடரில் களமிறங்கிய முதல் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியிடம் தோல்வியடைந்தது.

வார்னர் அவுட்டானது போட்டியின் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது.

2வது இன்னிங்ஸில் இரண்டாவது ஓவரில் பெங்களூர் வீரர் உமேஷ் யாதவ் பந்து வீச துடுப்பாடிய ஐதராபாத் தொடக்க வீரர் பரிஸ்டோவ் பந்தை நேராக விளாசினார்.

எதிரே இருந்த வார்னர் ரன் எடுக்க கீரிஸை விட்டு வெளியேறி நிலையில் பந்த நேராக உமேஷ் யாதவின் கையில் பட்டு பேட்ஸ்மேனுக்கு எதிர் திசையிலிருந்த ஸ்டம்ப் மீது பட்டது.

சற்றும் எதிர்பாராதவிதமாக அதிரடி மன்னன் டேவிட் வார்னர் அவுட்டானர்.

இந்த வினோதமான ரன் அவுட் குறித்து போட்டிக்கு பின் பேசிய வார்னர், தான் இதற்கு முன்பு இதுபோன்று அவுட்டானதாக நினைவே இல்லை என கூறினார்.

பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடும் போது தங்கள் அணியில் இருந்த குறைகளை மேம்படுத்த வேண்டும், அடுத்த போட்டிக்கு நாங்கள் கடுமையாக உழைப்போம் என வார்னர் கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்