மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை நிச்சயம் வெல்லும் - சச்சின் தெண்டுல்கர்

Report Print Kavitha in கிரிக்கெட்

ஐக்கிய அரபு அமீரகத்தில் 13வது ஐபிஎல் சீசன் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் தொடங்கிய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பாஞ்சாப் அணியை சூப்பர் ஓவரில் எளிதாக வீழ்த்தி டெல்லி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் என்று நம்புகிறேன் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

இது குறித்து இவர் மேலும் கூறுவதாவது,

மும்பைஅணி கோப்பையை நிச்சயம் வெல்லும், போட்டி எங்கு, எப்போதும் நடந்தாலும் எனது ஆதரவு மும்பை அணிக்கு உண்டு. மும்பை மற்றும் இந்தியன்ஸ் ஒன்றிணையும் போது அது மும்பை இந்தியன்ஸ் ஆகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதவுள்ளது. இப்போட்டி 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்