ஒழுங்கா கிரீஸ் உள்ளே நில்லு! அவுட்டாக்காமல் எச்சரித்த அவுஸ்திரேலிய பவுலர்: ரசிகர்களின் மனதை வென்ற வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் தொடரின் போது வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், மான்கட் முறையில் அவுட்டாக்கும் வாய்ப்பு கிடைத்தும், அதை செய்யாமல் பேட்ஸ்மேனை எச்சரித்து சென்ற வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

இங்கிலந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலியா அணி, அங்கு மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்று கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கிடையே மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது.

இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தனர்.

நேற்று இரு அணிகளுக்கிடையேயான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 303 ஓட்டங்களை அவுஸ்திரேலியா எணி எட்டி 2-1 என்று தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, 49-வது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார்.

அந்த ஓவரின் ஒரு பந்தை ஸ்டார்க் வீசும் முன்பாகவே பேட்ஸ்மேன் ஆன அடில் ரஷீத் க்ரீஸை விட்டு நகர்ந்து சென்றார். அதைக்கண்ட மிட்செல் ஸ்டார்க் பந்தை வீசாமல் ரஷீத்தை க்ரீஸுக்குள் நிற்குமாறு எச்சரித்துவிட்டு சென்றார்.

மான்கெட் செய்ய வாய்ப்பு கிடைத்தும் அதை செய்யாமல் மிட்செல் ஸ்டார்க் ஜென்டில்மேன் போல் செயல்பட்டுள்ளதாக கூறி ரசிகர்கள் பலர் மிட்செல் ஸ்டார்க்கை பாராட்டி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்