ஐபில் 2020... முதல் போட்டியில் ஜெயிக்க போவது சென்னையா? மும்பையா? காம்பீர் அளித்த பதில்

Report Print Santhan in கிரிக்கெட்

ஐக்கிய அரபு அமீரகத்தில், ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ள நிலையில், இது குறித்து முன்னாள் இந்திய வீரர் காம்பீர் பேசியுளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், கொரோனா காரணமாக வரும் 19-ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கவுள்ளது.

இதில் முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி குறித்து முன்னால் இந்திய அணி வீரர் காம்பீர் கூறுகையில், என்னை பொறுத்தவரை முதல் போட்டியில் சென்னை அணியை மும்பை அணி எளிதில் சமாளித்து விடும்.

ஏனெனில் பும்ரா, போல்ட் ஆகியோர் சென்னை பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக, பும்ரா மற்றும் போல்ட் ஆகியோர் இணைந்து பந்து வீசுவதை காண ஆவலாக உள்ளேன். இவர்கள் இருவரும் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள்.

அவர்கள் தனித்துவம் மும்பை அணிக்கு பெரிதும் கைகொடுக்கும். மேலும் ரெய்னாவின் இழப்பு சென்னைக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். ரெய்னா இல்லாத இடத்தில் வாட்சன் களம் இறங்க அதிக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மிடில் ஆர்டரில் சென்னை அணி எப்படி சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்