குடும்பத்துடன் ஸ்வீடனுக்கு இடம் பெயரும் முன்னாள் தென் ஆப்பரிக்க ஜாம்பவான்

Report Print Basu in கிரிக்கெட்

ஐபிஎல் தொடருக்கு பின்னர் முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ் குடும்பத்துடன் ஸ்வீடம் இடம் பெயரவுள்ளதாக ஸ்வீடிஷ் கிரிக்கெட் கூட்டமைப்பு (எஸ்சிஎஃப்) அறிவித்துள்ளது.

51 வயதான ரோட்ஸ் ஐபிஎல் தொடருக்காக தற்போது துபாயில் கிங்ஸ் லெவன் பஞ்சாபின் பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நாட்டின் ஜூனியர் கிரிக்கெட்டின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்பிரிக்க நட்சத்திரம் ஜான்டி ரோட்ஸை நியமித்துள்ளதாக ஸ்வீடிஷ் கிரிக்கெட் கூட்டமைப்பு (எஸ்சிஎஃப்) அறிவித்துள்ளது.

கிரிக்கெட்டுக்கு பெரிதும் அறியப்படாத ஒரு நாட்டில் அவர் எதிர்கொள்ளும் புதிய சவால் குறித்து உற்சாகமாக இருப்பதாக ரோட்ஸ் கூறினார்.

எனது குடும்பத்தினருடன் சுவீடனுக்கு இடம் பெயர்ந்து ஸ்வீடிஷ் கிரிக்கெட் சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த வாய்ப்பு சரியான நேரத்தில் வந்துவிட்டது, எனது ஆற்றல்களை முற்றிலும் புதிய சூழலில் முதலீடு செய்ய முடிந்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆவலுடன் இருக்கிறேன் என ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்