பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து வீரர் முன்னேற்றம்: டி20 தரவரிசை பட்டியல் வெளியீடு

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

சர்வதேச டி20 தொடரின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்தின் டேவிட் மாலன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்தில் தொடர்ந்து இருந்து வந்த நிலையில், அவரை பின்னுக்குத் தள்ளி மாலன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதேபோல சமீபத்தில் இங்கிலாந்துடன் தோல்வியை தழுவினாலும் 275 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

சர்வதேச டி20 தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதலிடத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருந்த பாகிஸ்தானின் பாபர் அசாம் தன்னுடைய நிலையிலிருந்து கீழே இறங்கியுள்ளார்.

அவருக்கு பதிலாக முதலிடத்தை இங்கிலாந்தின் டேவின் மாலன் பிடித்துள்ளார்.

சமீபத்தில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் 129 ஓட்டங்களை குவித்ததன் மூலம் அவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் டி20 தரவரிசையில் 2வது இடத்தை பிடித்ததே இவரது முந்தைய சாதனையாக உள்ளது.

தொடர்ந்து முதலிடத்தில் இருந்த பாபர் அசாம் 8 இடங்கள் கீழே இறங்கியுள்ளார். இங்கிலாந்து வீரர்கள் ஜானி பார்ஸ்டோ மற்றும் ஜோஷ் பட்லர் ஆகியோரும் தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் 72 ஓட்டங்களை குவித்த பார்ஸ்டோ 19வது இடத்தையும் பட்லர் 40வது இடத்திலிருந்து 28வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

இந்த தொடரில் அவுஸ்திரேலியாவின் ஆரன் பின்ச் 125 ஓட்டங்கள் குவித்ததன்மூலம் 3வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். க்ளென் மாக்ஸ்வெல் துடுப்பாட்ட வீரர்களில் 6வது இடத்தையும் சகலதுறை வீரர்களில் ஒரு இடம் முன்னேறி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார். இதில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடத்தில் உள்ளார்.

கடந்த மே மாதத்தில் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் அவுஸ்திரேலியா முதலிடத்தை பிடித்தது. தற்போது அவுஸ்திரேலியா 275 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ள நிலையில்,

சமீபத்திய டி20 தொடரை வெற்றி கொண்ட இங்கிலாந்து 271 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் 266 புள்ளிகளுடன் இந்தியா 3ஆம் இடத்திலும் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்