எடை 140 கிலோ! சூப்பர் மேனாக மாறி பறந்து ஒற்றை கையில் செம கேட்ச் பிடித்து மிரள வைத்து கிரிக்கெட் வீரர்: கொண்டாடிய சக வீரர்கள்

Report Print Basu in கிரிக்கெட்

கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) 2020 தொடரின் அரையிறுதி போட்டியில் செயின்ட் லூசியா ஜூக்ஸ் அணி வீரர் ரஹீம் கார்ன்வால், பறந்து ஒற்றை கையில் கேட்ச பிடித்து அனைவரையும் மிரள வைத்தார்.

செவ்வாயன்று நடந்த சிபிஎல் தொடரின் அரையிறுதிப் போட்டியில் செயின்ட் லூசியா ஜூக்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின.

முதலில் அமேசான் வாரியர்ஸ் அணி துடுப்பாட செயின்ட் லூசியா ஜூக்ஸ் அணி பந்து வீசியது.

முதன் இன்னிங்ஸின் 14வது ஓவரை ஜூக்ஸ் அணி பந்து சுழற்பந்து வீச்சாளர் ஜாஹிர் வீசி, துடுப்பாடிய வாரியர்ஸ் அணி வீரர் தாஹிர் பந்தை பவுண்டரி விளாச முயன்றார்.

ஆனால், பந்து துடுப்பின் ஓரத்தில் பட்டு பின்னால் சென்றது, ஸ்லிப்பில் இருந்து 140 கிலோ எடை கொண்ட ரஹீம் கார்ன்வால், பறந்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அனைவரையும் மிரள வைத்தார்.

தாஹீர் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். வாரியர்ஸ் அணி 55 ஓட்டங்களில் சுருண்ட நிலையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் செயின்ட் லூசியா ஜூக்ஸ் வெற்றி இலக்கை எட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

வியாழக்கிழமை நடைபெறவுள்ள கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) 2020 தொடரின் இறுதிப்போட்டியில் செயின்ட் லூசியா ஜூக்ஸ் அணி கீரோன் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸுடன் மோதவுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்