இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஐபிஎல் போட்டியின் போது அடிக்கடி தமிழில் டுவீட் செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார்.
இந்நிலையில் நேற்று ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாக் காலம் என்பதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் “ மாஸ்க் போடு” என தமிழில் பேசி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி அவர் அதில் “ வணக்கம் சென்னை, அவசியம் இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வாருங்கள். மாஸ்க் போடுங்கள்” என்று தெரிவித்து தனது வீடியோவுடன் சென்னை பொலிஸ் பக்கத்தை டேக் செய்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூகவளைத்தளங்களில் வைரலாகி பரவி வருகின்றது.
மேலும் ஐபிஎல் போட்டிக்காக ஹர்பஜன் சிங் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Mask podu @ChennaiIPL 😷😷 @chennaipolice_ pic.twitter.com/qZBIRVt74g
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 26, 2020