டோனியை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரரை எச்சரித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்! மீறினால் நடவடிக்கையாம்

Report Print Santhan in கிரிக்கெட்
2782Shares

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த டோனியை, புகழ்ந்து தள்ளிய சக்லைன் முஸ்தாக்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, கடந்த 15-ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதையடுத்து, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான சக்லைன் முஸ்தாக், தன்னுடைய யூ டியூப் சேனலில் டோனியைப் பற்றி பேசியிருந்தார்.

அதில், டோனி மாதிரியான ஒரு பெரிய வீரருக்கு முறையான பேர்வெல் மேட்ச் நடத்தாதது பி.சி.சி.ஐ -யின் தோல்வி. இது என் நெஞ்சிலிருந்து நேராக வரும் வார்த்தைகள். அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களும் இதையே உணர்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.

டோனிக்கு முறையாக சென்ட்-ஆப் கொடுக்காதது என் மனத்தில் காயம் ஏற்படுத்தியுள்ளது என்று கூறியிருந்தார்.

முஷ்டாக்கின் நிலைப்பாடு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் முரண்பட்ட நிலையில் இனி இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க வேண்டாம் என்று அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது.

அதுமட்டுமின்றி முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் என அனைவரும் கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறையைப் பின்பற்றுவது குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைமீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்