ஐ.பி.எல். போட்டியின் போது 50 வீரர்களிடம் ஊக்கமருந்து சோதனை நடத்த திட்டம்

Report Print Kavitha in கிரிக்கெட்

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடைபெறவிருக்கின்றது.

இப்போட்டி துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்தபோட்டியில் பங்கேற்கும் குறைந்தது 50 வீரர்களிடம் ஊக்கமருந்து சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளதாக ஊக்கமருந்து தடுப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்காக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அதிகாரிகள், ஊழியர்கள் 9 பேர் அமீரகம் செல்ல உள்ளனர்.

மேலும் ஊக்கமருந்து தடுப்பு முகமை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் எளிதில் மாதிரிகளை எடுத்து சோதிக்க வசதியாக மூன்று மைதானங்களிலும், இரண்டு பயிற்சி இடங்களிலும் ஊக்கமருந்து தடுப்பு கட்டுப்பாடு மையங்கள் அமைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்