டோனி மீது வெறுப்பு வந்தது... எப்படி போட்டாலும் அடித்தார்! சோயிப் அக்தர் பகிர்ந்த தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்
1560Shares

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் பற்றி டோனி பற்றி பேசியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீட்டில் அடங்கி கிடக்கும் கிரிக்கெட் வீரர்கள் சமூகவலைத்தளங்களில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர், தன்னுடை யூ டியூப் சேனலில் டோனியைப் பற்றி பேசியுள்ளார்.

அதில், 2006-ஆம் ஆண்டு பைசலாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 9 ஓவர்கள் பந்துவீசி வந்தேன். அப்போது அந்த இன்னிங்ஸில் டோனி சதம் அடித்தார்.

டோனி சதம் அடித்து முடித்தவுடன். நான் அவரை குறிவைத்தே பீமரை வீசினேன். பின்பு அதற்காக டோனியிடம் மன்னிப்பும் கேட்டேன்.

அப்போதுதான் என் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பேட்ஸ்மேனுக்கு வேண்டுமென்றே பீமரை வீசினேன். அதை நான் செய்திருக்கக் கூடாது. அதற்காக பிறகு நான் மிகவும் வருந்தினேன். அன்றையப் போட்டியில் நான் எப்படிப் போட்டாலும் டோனி அடித்துக்கொண்டே இருந்தார். அதனால் நான் கொஞ்சம் வெறுப்படைந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்