வேகமாக ஓட முடிகிற வரை... ஓய்வு தொடர்பில் டோனி சூசகம்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
623Shares

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டோனி தாம் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதை சூசகமாக அப்போதெ தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

டோனி இந்தியாவுக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாடுவாரா அல்லது ஒய்வு பெறும் முடிவை அறிவிப்பாரா என கிரிக்கெட் ஆர்வலர்கள் பரவலாக விவாதித்து வருகின்றனர்.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாதது தான் இதற்கு காரணம்.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியை வழிநடத்த உள்ள டோனி அதற்கான வலை பயிற்சியை துவக்கியுள்ளார்.

டோனி எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் அவரது துடுப்பாட்டம் மூலம் அவரை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் கொடுப்பார் என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேகர்.

கோஹ்லியின் திருமணத்தின்போது டோனி தன்னிடம் பகிர்ந்த தகவல்களை தெரிவித்துள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேகர்.

போதுமான உடற்தகுதியோடு தன்னால் வேகமாக ஓட முடியும் வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தகுதியானவன் என்று கருதுகிறேன் என டோனி தன்னிடம் கூறியதாக மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்