நீ அதுக்கு சரிபடமாட்ட... ஒதுக்கிய சேப்பல்: நிரூபித்து காட்டிய சாஹர்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் களத்தில் பந்துவீசுவதற்கான தகுதி இல்லை என அந்த இளைஞர் விளையாடுவதற்கான வாய்ப்பை தட்டிக்கழித்தார் அப்போதைய ராஜஸ்தான் கிரிக்கெட் அகடாமியின் இயக்குனர் கிரேக் சேப்பல்.

அவரது வார்த்தைகள் அந்த இளைஞரை மனதளவில் பாதித்துவிட, பந்துவீச்சாளருக்கு தேவையான சகல நுணுக்கங்களையும் கற்று சர்வதேச கிரிக்கெட் களத்தில் ஆகச்சிறந்த டி20 பவுலர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் அந்த இளைஞர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதான பவுலர்களில் ஒருவரான தீபக் சாஹர் தான் அந்த இளைஞர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் மால்கம் மார்ஷலும், தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெய்னும் தான் தீபக் சாஹரின் இன்ஸ்பிரேஷன்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் அசத்தி வந்த சஹாருக்கு ராஜஸ்தான் மாநில அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு அமைந்தது.

அந்த வாய்ப்பு கிடைத்த போது சாஹருக்கு பதினாறு வயதே நிரம்பியிருந்தது. தேர்வு குழுவினர் முன்னர் அவர் பந்துவீசிய போது தான் கிரெக் சேப்பல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுவதற்கான தகுதி இவனிடம் இல்லை என கூறியுள்ளார்.

அதை கேட்டு சற்றும் மனந்தளராத சாஹர் தீவிர பயிற்சிக்கு பின்னர் 2010-11 ரஞ்சி சீசனில் ராஜஸ்தான் அணிக்காக அறிமுக வீரராக களம் இறங்கினார்.

அந்த சீசனில் 40 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணிக்கு கிண்ணத்தை வெல்ல உதவினார்.

2012 ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்டார் சாஹர்.

2015 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய போதும் அதிகம் பந்து வீசுவதற்கான வாய்ப்பை பெறவில்லை.

பின்னர் டோனி தலைமையிலான ரைசிங் பூனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணிக்காக விளையாட சாஹர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இந்த மாற்றம் தான் அதுவரை மாற்று பவுலராக இருந்த சஹாரை சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் டி20 பவுலராக மாற்றியது.

டோனிக்கு தொடர்ந்து வலைப்பயிற்சியின் போது சாஹர் வீசிய பந்துகள் பெரிய ஷார்ட்டுகள் விளையாட முடியாமல் டோனியை திகைக்க செய்துள்ளது.

2018-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடைகாலம் முடிந்து ஐ.பி.எல் தொடருக்குள் ரீ-என்ட்ரி கொடுத்த போது புதுமுகமாக சாஹரும் அணிக்குள் நுழைந்திருந்தார்.

பன்னிரண்டு போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி பத்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் சாஹர்.

அதன் விளைவாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியில் டி20 போட்டியில் விளையாட சஹார் தேர்வு செய்யப்பட்டார்.

வேகப்பந்து வீச்சின் சொர்க்கபுரியான இங்கிலாந்து ஆடுகளத்தில் முதல் போட்டியிலேயே இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மென் ஜேசன் ராயை வீழ்த்தியிருந்தார். கடந்த 2019 ஐ.பி.எல் சீசனில் சென்னை அணிக்காக விளையாடி பதினேழு போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அந்த சீசனில் 190 டாட் பால்களை அவர் வீசியிருந்தார். தீபக் சாஹரை ஸ்பெஷலிஸ்ட் டி20 பவுலராக மாற்றியதே டோனி தான் என்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்