ஆசையுடன் விளையாட காத்திருந்த ஆப்கான் வீரருக்கு இப்படி ஒரு நிலையா வரனும்? 30 லட்சம் ரூபாய் பேச்சே

Report Print Santhan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவில், 2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஆட இருந்த இளம் ஆப்கன் வீரர் கயாஸ் அஹ்மது விசா பிரச்சனை காரணமாக அந்த வாய்ப்பை இழந்துள்ளார்.

2020-ஆம் ஆண்டிற்கான கரீபியன் பிரீமியர் லீக் தொடர் மேற்கிந்திய தீவில் வரும் ஆகஸ்ட் 18-ஆம் திகதி முதல் துவங்க உள்ளது. அந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன.

இறுதிப் போட்டி செப்டம்பர் 10-ஆம் திகதி நடைபெற உள்ளது.

அந்த தொடரில் முன்னணி மேற்கிந்திய தீவு வீரர்கள் பங்கேற்கின்றனர். அவர்களுடன் பல வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலரும் கூட அந்த தொடரில் பங்கேற்க உள்ளனர்.

அதில் மூன்று ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு கரீபியன் தீவுகளுக்கு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையிலும் விசா சிக்கல் காரணமாக அவர்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த மூன்று வீரர்களுக்கும் லண்டன் வழியாக செல்ல விசா கிடைக்கவில்லை.

ஆப்கானிஸ்தான் சர்வதேச அணியில் இடம் பெற்றுள்ள கயாஸ் அஹ்மது மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோருடன் 15 வயது நூர் அஹ்மது ஆகியோர் தான் அந்த மூன்று வீரர்கள். அவர்களில் கயாஸ் அஹ்மது கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் ஆட இருந்தார்.

கயாஸ் அஹ்மது 30 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து இருந்தார். தற்போது அந்த தொகையை அவர் இழந்துள்ளார்.

முன்னதாக இங்கிலாந்து டி20 பிளாஸ்ட் தொடரில் ஆட சுமார் 70 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து இருந்தார். அந்த தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்த பணத்தையும் அவர் இழந்துள்ளார்.

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ரஷித் கான், முகமது நபி, ஜாகிர் கான், நஜிபுல்லா சத்ரான், முஜிப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக் உள்ளிட்ட ஆப்கானிஸ்தான் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்கள் தற்போது ட்ரினிடாட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்