ஐபிஎல் ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து சீனாவின் விவோ விலகல்: வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Basu in கிரிக்கெட்

2020 ஐபிஎல் டி20 கிரிக்கெட் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விவோ நிறுவனம் விலகியதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

லடாக் கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் எய்தியதையடுத்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, டிக் டாக் உட்பட 59 மொபைல் செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. மேலும், ஐபிஎல் தொடரில் சீன ஸ்பான்ஸர் நிறுவனங்கள் நிராகரிக்கப்படும் என தகவல்கள் கசிந்தன.

ஆனால், ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள நிலையில் டைட்டில் ஸ்பான்சராக சீனாவின் விவோ நீடிக்கும் என்று சமீபத்தில் நடந்த பிசிசிஐ கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன் விவோ டைட்டில் ஸ்பான்சரிலிருந்து வெளியேறியதாக தகவல்கள் கசிந்தன, ஆனால், பிசிசிஐ அல்லது விவோ இருதரப்பில் எந்தத் தரப்பும் இதனை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் 2020 ஐபிஎல் தொடர் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து சீனாவின் விவோ நிறுவனம் விலகிக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2018-ல் 5 ஆண்டுகால ஒப்பந்தத்துக்காக விவோ நிறுவனம் ரூ.2199 கோடி அளித்தது குறிப்பிடத்தக்கது.

2021 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்ஸிப்பினை தொடர விரும்புவதாக விவோ கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்