இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த டோனி இவர் தான்- சுரேஷ்ரெய்னா கருத்து

Report Print Kavitha in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த டோனி ரோகித் சர்மா தான் என்று சுரேஷ் ரெய்னா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது,

டோனிக்கு அடுத்து முன்னணி வீரர்களில் ஒருவராக ரோகித் சர்மா விளங்குகிறார். அவரது கேப்டன்ஷிப் தன்மையை நான் பார்த்து இருக்கிறேன்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமது அணி கோப்பையை வென்றபோது அவரது தலைமையின் கீழ் நான் விளையாடி உள்ளேன்.

டோனியையும் விட அதிக ஐ.பி.எல். கோப்பையை ரோகித் சர்மா வென்றுள்ளார்.

இருவருடைய கேப்டன்ஷிப் பண்பும் ஒரே மாதிரி தான் இருக்கும். இருவருமே மற்றவர்களின் கருத்தை கவனிக்கக்கூடியவர்கள்.

ஏனெனில் கேப்டன் மற்றவர்கள் சொல்வதை கவனித்தாலே நிறைய பிரச்சினைகளை தீர்க்க முடியும். அத்துடன் வீரர்களின் மனரீதியான பிரச்சினையை சமாளிக்க முடியும்.

அதுமட்டுமின்றி ரோகித் சர்மா மிகவும் அமைதியானவர், மற்றவர்களின் கருத்தை கேட்கக்கூடியவர், சக வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பதில் விருப்பம் கொண்டவர், அணியை வழிநடத்துவதை விரும்பக்கூடியவர், வீரர்களின் ஓய்வறை சூழலுக்கும் மதிப்பு அளிப்பவர், அவர் எல்லோரையும் ஒரு கேப்டனாக நினைப்பார்.

இதனால் என்னை பொறுத்தமட்டில் இருவரும் அற்புதமான கேப்டன்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்