இனி ஒரு நொடி கூட காத்திருக்க முடியாது! மிகவும் ஆர்வமாக உள்ளேன்... ஐபிஎல் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரெய்னா

Report Print Raju Raju in கிரிக்கெட்
277Shares

களத்தில் இறங்கி விளையாட இனி ஒரு நொடி கூட காத்திருக்க முடியாது என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலினால் கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை நடக்கயிருந்த இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் வரும் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி, போட்டிகளுக்குக்கான அட்டவணைகள் முதலியவற்றை ஐபில் போட்டிகளை நிர்வகிக்கும் குழு கலந்தாய்வின் மூலமாக தீர்மானிக்கவும் உள்ளது.

இந்தச் சூழலில் சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் ‘சின்ன தல’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா ‘களத்தில் இறங்கி விளையாட இனி ஒரு நொடி கூட காத்திருக்க முடியாது. சென்னை அணியோடு வரவிருக்கும் ஐபிஎல் தொடரை விளையாட ஆர்வத்தோடு எதிர்பார்த்துள்ளேன். அமீரகம் சென்று விளையாடுவதை மகிழ்சசியாக உணர்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் நடத்துவது உறுதியாகி உள்ள சூழலில் உற்சாகத்தோடு இதை அவரது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரெய்னா.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்