வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

Report Print Kavitha in கிரிக்கெட்
194Shares

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

மான்செஸ்டரில் நடைபெற்ற இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்ற பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய இங்கிலாந்து அணி முதல் இன்னின்ங்சில் 9 விக்கெட்டுக்களை இழந்து 469 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 176 ரன்கள் குவித்தார்.தொடக்க ஆட்டக்காரர் டோம் சிபிலி 120 ரன்கள் எடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து ஆடிய பிராத்வைட் (75), ப்ரூக்ஸ் (68), ராஸ்டன் சேஸ் (51) ஆகியோரின் அரைசதங்களால் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 287 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி ஆட்டமிழந்தனர். இதில இங்கிலாந்து தரப்பில் பிராட் மற்றும் கிரிஷ் ஒக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் 182 ரன்கள் முன்னிலையில் இருந்த இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கி 129 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 312 ரன்கள் இலக்கு என்ற நிலை இருந்தது.

இந்த இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 198 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்ததால் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேலும் 3-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்ட்ர் மைதானத்தில் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்