உலகக்கிண்ணம் டி20 தொடர் எப்போது? வெளியான உத்தியோகப்பூர்வ தகவல்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
213Shares

டி20 உலகக்கிண்ணம் 2020 கிரிக்கெட் தொடர் கொரோனா அச்சுறுத்தலினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அவுஸ்திரேலியாவில் அக்டோபர் 18 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக்கிண்ணம் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது.

உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் சூழலில் இந்த போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தொடர்ந்து, ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக்கிண்ணம் 2021 கிரிக்கெட் போட்டிகள், 2021 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை நடைபெறும் என்றும் இறுதி போட்டி நவம்பர் 14ல் நடக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

இதேபோன்று ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக்கிண்ணம் 2022 கிரிக்கெட் போட்டிகள், 2022ம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை நடைபெறும் என்றும் இறுதி போட்டி நவம்பர் 13ல் நடக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

இருப்பினும், இந்த போட்டிகள் நடைபெறும் இடம் பற்றி அறிவிப்பு வெளியாகவில்லை. 50 ஓவர் உலகக்கிண்ணம் போட்டி, 2023ம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை இந்தியாவில் நடைபெறும் என்றும் இறுதி போட்டி நவம்பர் 26ல் நடக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்