எனக்கு உதவுவதற்கு யாரும் கிடையாது! முடிந்த வரை முயற்சி செய்தேன்.. தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் பத்ரிநாத் உருக்கம்

Report Print Raju Raju in கிரிக்கெட்
312Shares

இந்திய அணியில் என் இடத்தை தக்க வைத்து கொள்ள பல முயற்சிகளை முடிந்த வரையில் செய்தேன் என தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார்.

பத்ரிநாத் அளித்துள்ள பேட்டியில், என்னால் முடிந்த அளவு அனைத்தையும் முயற்சி செய்து பார்த்தேன் அப்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை சச்சின், டிராவிட் லட்சுமண், சேவாக், கம்பீர், யுவராஜ் என நிரம்பி இருந்தது. நான் அப்போது என்னுடைய பந்துவீச்சில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

அப்போது அணியில் ஆல் ரவுண்டர் இடம் காலியாக இருந்தது. ஏனென்றால் நான் ஓரளவுக்கு ஆப் ஸ்பின் நன்றாகவே வீசுவேன் உள்ளூர் போட்டிகளில் விக்கெட் எடுத்து இருக்கிறேன், அப்போது எனக்கு உதவுவதற்கு யாரும் கிடையாது.

அதனால் என்னுடைய பேட்டிங்கில் தான் நான் முழுக்க முழுக்க கவனம் செலுத்தினேன். ஆல் ரவுண்டராக இருந்திருந்தால் ஆறாவது அல்லது ஏழாவது பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்பு இருந்திருக்கும், அணியின் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக இருந்திருப்பேன்.

அணியில் இருந்த வரை என்னுடைய பங்களிப்பை முடிந்தளவுக்கு கொடுத்துள்ளேன்என பத்ரிநாத் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்