இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலி குறித்து சில விஷயங்களை குமார் சங்ககாரா பகிர்ந்துள்ளார்.
கடந்த 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் அப்போதைய தலைவரான கங்குலிக்கும், இலங்கை வீரர் ரசல் அர்னால்ட்டிற்கு மோதல் ஏற்பட்டது.
ஏனெனில், அர்னால்ட் பிட்ச்சின் மீது அடிக்கடி ஓடியதை தொடர்ந்து சுட்டிக்காட்டிய கங்குலி, ஒரு கட்டத்தில் கோபமடைய இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
தொடர்ந்து நடுவர்கள் தலையிட்டு இருவரையும் விலக்கினர்.
இதையடுத்து இலங்கை அணியினரின் உடை மாற்றும் அறைக்கு சென்ற சவுரவ் கங்குலி, அங்கிருந்த சங்ககாரா உள்ளிட்ட வீரர்களுடன் வருத்தத்துடன் பேசியதாகவும், இந்த நிகழ்வு தன்னை இடை நீக்கம் செய்ய காரணமாக அமையும் என்று கூறியதாகவும் தற்போது சங்ககாரா தெரிவித்துள்ளார்.